Pages

Tuesday, March 12, 2013

இரட்டைச் சதமடித்த வங்கப்புலி..

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணி சார்பாக முதல் இரட்டைச் சதமடித்த வீரராக வரலாற்று சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்.இலங்கையுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலே இந்த அரிய சாதனையை அவர் நிலை நாட்டினார். 2005 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்பிகுர் ரஹீம் தனது பதினேழாவது போட்டியில் முதல் சதத்தை 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சிட்டஹொங்கில் பெற்றார்.இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் 31.91 என்ற சராசரியில் 1787 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதில் 9 அரைச் சதங்களும் அடங்கும். மிக இள வயதில் அணியின் உப தலைவரான முஷ்பிகுர் ரஹீம் 23 வயதில் அணித் தலைவரானார்.பின் வரிசையில் களமிறங்கும் இவர் தோற்றத்தில் உயரம் குறைந்தவராய் இருந்தாலும் விக்கெட்டுகளுக்கிடையே ஓட்டங்களை வேகமாய்ப் பெறக்கூடியவர்.அணியின் விக்கெட் காப்பாளராகவும் சிறப்பாக செயற்படுகிறார். இலங்கை அணிக்கெதிராக 13 போட்டிகளில் பகுபற்றியுள்ள பங்களாதேஷ் முஷ்பிகுர் ரஹீம் தலைமையில் முதன் முறையாய் தோல்வியைத் தவிர்த்து வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றுள்ளது.இதற்கு ரஹீமின் அபாரமான துடுப்பாட்டமே காரணம். இள வயதில் பல போட்டிகளில் சாதித்த இவர் இன்னும் அதிகம் சாதிக்க வாழ்த்துகிறோம்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates